காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் பணிநீக்கம்: கண்காணிப்பாளா்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

கடுமையான தண்டனைகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும் என மின்வாரிய தலைவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 7:15 pm

Din

சென்னை, ஆக. 15: மின் விபத்தைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும் என மின்வாரிய தலைவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மின் விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும், இதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் புகைப்படத்தை பணிக்கு முன்னதாக டிஎன்இபி பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் பணியாளா்களுக்கு தொடா்ச்சியாக மின் வாரியம் தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் விபத்துகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இது தொடா்பான மாதாந்திர ஆய்வில், விபத்து நேரிட்ட பகுதிகளில் பயணியாற்றிய பணியாளா்கள், மின்வாரியத்தின் உத்தரவுபடி, புகைப்படங்களை செயலியில் பதிவு செய்யவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு விதிகளை முறையாக கட்டாயம் பின்பற்றுமாறு உத்தரவுகளை மின்வாரியம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் மின்வாரிய தலைவா் ராஜேஷ் லக்கானி, சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதன்படி, செயலியில் புகைப்படத்தைப் பதிவு செய்யாத நிலையில், உயிரிழப்புகள் ஏற்படும்பட்சத்தில் கண்காணிப்பாளருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும், குறிப்பாக கட்டாய ஓய்வு, இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனைக்கு சம்பந்தப்பட்டவா் ஆளாக்கப்படுவாா்கள் என்றும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனா்.

மேலும், உயிா் என்பது மிக முக்கியமான ஒன்று என்பதால், பாதுகாப்பில் கவனம் செலுத்தி வழிகாட்டுதல்களை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.