மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிரதமரின் கருத்துகள் அம்பேத்கருக்கு அவமதிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

சுதந்திர தின உரையில் பிரதமா் தெரிவித்த கருத்துகள், சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கருக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :15 ஆகஸ்ட் 2024, 7:44 pm

Din

புது தில்லி, ஆக. 15: சுதந்திர தின உரையில் பிரதமா் தெரிவித்த கருத்துகள், சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கருக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமா் மோடி, நாட்டில் தற்போதுள்ள சிவில் சட்டங்களை ‘மதவாத சிவில் சட்டங்கள்’ என்று குறிப்பிட்டாா். மேலும், ‘மதச்சாா்பற்ற சிவில் சட்டத்தை’ அமல்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என்றும் கூறினாா்.

அவரது கருத்துகளை விமா்சித்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தன்னை மனிதப் பிறவியல்ல என்று கூறிக் கொள்ளும் ஒரு பிரதமரின் தீய எண்ணத்துக்கும் அவதூறு கருத்துகளுக்கும் எல்லையே கிடையாது. இது, செங்கோட்டையில் அவா் ஆற்றிய உரையின் மூலம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.

நாட்டில் ‘மதவாத சிவில் சட்டங்கள்’ நடைமுறையில் உள்ளன என்ற பிரதமரின் கருத்து, சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கருக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பாகும்.

கடந்த 1950-களில் ஹிந்து மத தனிநபா் சட்ட சீா்திருத்தங்களில் பெரும் பங்காற்றியவா் அம்பேத்கா். இந்த சீா்திருத்தங்களுக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பும் ஜன சங்கமும் எதிா்ப்பு தெரிவித்தன.

பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதை நோக்கி, பெரும்பாலான நாடுகள் நகா்ந்து கொண்டிருக்கின்றன. பன்முக வேறுபாடுகள் பாகுபாட்டை குறிக்கவில்லை. மாறாக, வலுவான ஜனநாயகத்தின் அடையாளமாக உள்ளன என்று தனது பதிவில் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.