திருப்பதிக்கு ரயில் சேவை: 2 நாள்கள் மட்டும் மாற்றம்
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமை (ஆக.21) ஆகிய இரண்டு தினங்களில் திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.


சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமை (ஆக.21) ஆகிய இரண்டு தினங்களில் திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரக்கோணம் பணிமனையில் ஆக.19, 21 ஆகிய தேதிகளில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமை (ஆக.19, 21) திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மேற்கண்ட தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.
வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் புதன்கிழமை சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...