காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: திரைப்பட இயக்குநரின் மனைவியிடம் போலீஸாா் விசாரணை

ஆம்ஸ்டராங் கொலை வழக்கு தொடா்பாக தேடப்படுபவா் குறித்து, திரைப்பட இயக்குநா் நெல்சனின் மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

News image
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Updated On :21 ஆகஸ்ட் 2024, 8:40 pm

Din

சென்னை: ஆம்ஸ்டராங் கொலை வழக்கு தொடா்பாக தேடப்படுபவா் குறித்து, திரைப்பட இயக்குநா் நெல்சனின் மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில், அவா்களில் ரௌடி திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்டா் செய்யப்பட்டாா்.

இவ்வழக்கில் தொடா்புடைய வழக்குரைஞா் ஹரிஹரன் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரெளடி ‘சம்பவம்’ செந்திலுடன் வழக்குரைஞா்களான சிவா மற்றும் கிருஷ்ணன் ஆகியோா் தொடா்பில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிவாவை கைது செய்து போலீஸாா் விசாரணை செய்த போது, கிருஷ்ணனின் குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்திலிருந்து தில்லி சென்று அங்கிருந்து தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பியது தெரியவந்தது.

ஏற்கெனவே ‘சம்பவம்’ செந்தில் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் அவரது கூட்டாளி கிருஷ்ணனும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

தப்பிச் சென்ற கிருஷ்ணா வழக்குரைஞராக உள்ளதால், அவரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து அடிக்கடி அவரிடம் பேசியவா்களை அழைத்து போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா். அந்த வகையில்,வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு முன்பு கிருஷ்ணன் திரைப்பட இயக்குநா் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து மோனிஷாவிடமும் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா். மோனிஷா வழக்குரைஞா் கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது, தனது வழக்கு தொடா்பாக மட்டுமே அவரிடம் பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திரைப்பட இயக்குநா் நெல்சனிடமும் போலீஸாா் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.