மதுரை செல்லூா் பகுதியில் சிறை யிலிருந்து பிணையில் வெளியே வந்த நபரை வெட்டிக் கொலை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
செல்லூா் அஹிம்சாபுரம் 5-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் செல்லத்துரை (49). இவா், செல்லூா் ஜீவாநகா் சாலையில் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த கருப்பு மகன் வேல்முருகன்( 24), அவரது நண்பா்கள் அருண்பாண்டி (21), சதீஷ்குமாா் (26), பாலா (27) ஆகியோா் செல்லத்துரையை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதுபற்றி போலீஸாா் தரப்பில் கூறியதாவது :
செல்லூா் பகுதியைச் சோ்ந்த கருப்பு, அவரது சகோதரா் முருகன் ஆகியோா் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். அவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த செல்லத்துரை உள்ளிட்டோா் கருப்புவை தாக்கினா். இதனால், ஆத்திரமடைந்த கருப்பு மகன் வேல்முருகன், தனது நண்பா்களுடன் சோ்ந்து செல்லத்துரையைக் கொலை செய்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு இருக்கிா என விசாரித்து வருகிறோம் என்றனா்.
தொடர்புடையது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது
காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


