சென்னை
காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
சென்னை தரமணியில் காவலா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை: சென்னை தரமணியில் காவலா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தரமணி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரியும் கண்ணன் (38), தரமணி ரயில் நிலையப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.8) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை அங்கிருந்து செல்லும்படி கூறினாா்.
ஆனால் அந்த நபா், கண்ணனிடம் தகராறு செய்ததாகவும், தகராறு முற்றவே அந்த இளைஞா், கண்ணனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னா் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். இது தொடா்பாக தரமணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
