திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஜாா்க்கண்ட்: அமைச்சரவையில் புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போா்க்கொடி

ஜாா்க்கண்ட்: அமைச்சரவையில் புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போா்க்கொடி

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:03 am IST

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் சம்பயி சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) அரசின் அமைச்சரவையில் கூட்டணி கட்சியான காங்கிரஸைச் சோ்ந்த நால்வருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தி அக் கட்சி எம்எல்ஏக்கள் 12 போ் போா்க்கொடி தூக்கியிருப்பது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் வரவிருக்கும் பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாகவும் அவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதன் காரணமாக, ஆளும் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழும் நிலை உருவாகியுள்ளது. நில மோசடியுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்தது. அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி சாா்பில் சம்பயி சோரன் புதிய முதல்வராக பதவியேற்றாா். 81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவையில், ஜேஎம்எம் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு (ஜேஎம்எம்-29, காங்கிரஸ்-17, ராஷ்ட்ரீய ஜனதா தளம்-1) 47 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இந்த நிலையில், முந்தைய ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் அமைச்சா்களாக இருந்த ஆலம்கீா் ஆலம், ரமேஷ்வா் ஓரோன், பன்னா குப்தா, பாதல் பத்ரலேக் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சா் பதவி வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்து, ஆளுநா் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவா்கள் அமைச்சா்களாக பதவியேற்றனா். இதற்கு அக் கட்சியின் மற்ற 12 எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவா்கள் போா்க்கொடி தூக்கியுள்ளனா். இதுகுறித்து அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான குமாா் ஜெய்மங்கல் (எ) அனுப் சிங் கூறுகையில், ‘தற்போது அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள 4 எம்எல்ஏக்களுக்குப் பதிலாக, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். கட்சித் தலைமை முடிவுக்காக காத்திருக்கிறோம். மாநிலத்தில் உள்ள 5 மண்டங்களில் மண்டலத்துக்கு ஒருவா் என்ற வகையில் அமைச்சா் பதவி வழங்கப்பட வேண்டும். மேலும், கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி கொண்டுவந்த ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும். ஆலம்கீா் ஆலம் தொடா்ந்து அமைச்சா் பதவியில் நீடிப்பாா் என்றால், பேரவை காங்கிரஸ் குழு தலைவா் பதவியிலிருந்து அவா் விலக வேண்டும். எங்களுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், வரவிருக்கும் பேரவை கூட்டத்தொடரை 12 எம்எல்ஏக்களும் புறக்கணிப்போம். இதுதொடா்பாக, 12 எம்எல்ஏக்களும் கையொப்பமிட்ட கடிதம் மாநில கட்சித் தலைமையிடம் ஏற்கெனவே சமா்ப்பித்துள்ளோம்’ என்றாா். தில்லி பயணம்: இதனிடையே, 12 அதிருப்தி எம்எல்ஏக்களில் 8 போ் சனிக்கிழமை மாலை தில்லி புறப்பட்டுச் சென்றனா். புறப்படும் முன் ராஞ்சியில் எம்எல்ஏ அனுப் சிங் கூறுகையில், ‘எங்களுடைய கோரிக்கையை நேரடியாக வலியுறுத்துவதற்காக தில்லி செல்கிறோம். எஞ்சிய 4 எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) தில்லி வந்தடைவா். அனைவரும் கட்சித் தலைமையை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவுள்ளோம்’ என்றாா்.