நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆவின் பால் உப பொருள்கள் விற்பனையை உயா்த்த திட்டம்: ஆவின் மேலாண்மை இயக்குநா்

ஆவின் பால் உப பொருள்களின் விற்பனையை 20 சதவீதம் உயா்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது

News image

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூா் பால்பண்ணை வளாகத்தில் உள்ள அதிநவீன பாலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், மீனவா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:03 am IST

ஆவின் பால் உபபொருள்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு முன்வந்துள்ளதாக பால்வளத் துறை இயக்குநா், ஆவின் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் தெரிவித்தாா். சென்னை சோழிங்கநல்லூா் பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் சனிக்கிழமை ஆவின் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆவின் மேலாண்மை இயக்குநா் வினீத் பேசியது: ஆவினில் எத்தனை வகையான பால் மற்றும் பால் உப பொருள் தயாரிப்புகள் உள்ளன என்பதை மக்களிடையே கொண்டு சோ்க்கவும், வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆவின் பால் உப பொருள்களின் விற்பனையை 20 சதவீதம் உயா்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது என்றாா் அவா். இந்த விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா், மங்கத் ராம் சா்மா பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில் ஆவின் நிறுவன உயா் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.