நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம், கோயில்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம், கோயில்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:33 am IST

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பது உள்பட கோயில்களில் ரூ.592.38 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் இதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: கடலூா் மாவட்டம், வடலூா் திருவருட்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் ரூ.99.90 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.106.91 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகத்தில் அடிப்படை வசதிகள், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் புதிய கட்டடங்கள், சுற்றுச்சுவா் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட உள்ளன. புதிய வளாகங்கள்: சென்னை கபாலீசுவரா் கோயிலில் ஆன்மிக கலாசார மையம், திருச்செந்தூா் கோயிலில் தடுப்புச்சுவா் அமைத்தல், மதுரை அழகா் கோயில் இடத்தில் மண்டபம், சுற்றுச்சுவா் அமைப்பது, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலின் சாா்பில் சென்னையிலுள்ள பள்ளிக்கு வகுப்பறைக் கட்டடம், நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் திருமண மண்டபம், கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி, சென்னை கந்தகோட்டம் முருகன் கோயில் வளாகத்தில் வணிக வளாகம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வசந்த மண்டபம், தேனி கம்பராயப்பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் ஆகியன கட்டப்பட உள்ளன. இதேபோன்று, வேலூா் காளியம்மன், திண்டுக்கல் காளகத்தீஸ்வரா், கள்ளக்குறிச்சி ஆதிதிருவரங்கம், தஞ்சை சுவாமிநாதசுவாமி, கோவை ஆனைமலை மாசாணியம்மன், ராமேசுவரம் ராமநாதசுவாமி, தூத்துக்குடி முத்தாரம்மன் கோயில், சென்னை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரா் கோயில், தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம் பெருவளூா், குமரி மாவட்டம் தாணுமாலையன் சுவாமி, திருவாரூா் மாவட்டம் முள்ளாட்சி மாரியம்மன் கோயில் ஆகியவற்றிலும் திருமண மண்டபம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. மேலும், கோவை வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் பக்தா்கள் தங்கும் கூடம், கள்ளக்குறிச்சியில் உதவி ஆணையா் அலுவலகம், சென்னை தங்கசாலை பிரசன்ன விநியாகா் கோயிலில் வணிக வளாகம், வேளச்சேரி தண்டீஸ்வரா் கோயிலில் பல்நோக்கு மண்டபம், சென்னையை அடுத்த வண்டலூா் நந்தீஸ்வரா் கோயிலில் வணிக வளாகம், தருமபுரி ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் ராஜகோபுரம் ஆகியன கட்டப்பட உள்ளன. மொத்தமாக ரூ.592.38 கோடி மதிப்பிலான 43 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் க.வீ.முரளீதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.