வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநா் பெயரில் ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி போலீஸாா் விசாரணை

தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநா் அபய்குமாா் சிங் பெயரில் ‘பாஸ் ஸ்கேம்’ மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை

Updated On :23 பிப்ரவரி 2024, 11:40 pm

தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநா் அபய்குமாா் சிங் பெயரில் ‘பாஸ் ஸ்கேம்’ மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநா் அபய்குமாா் சிங்கின் புகைப்படம், பெயருடன் உள்ள ஒரு வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து சில நாள்களுக்கு முன்பு அத்துறையின் கீழ்நிலை அதிகாரிகளுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் தகவல்கள் சென்றுள்ளன. அதில், தனக்கு அவசரமாக அமேசான் பரிசுக் கூப்பன் தேவைப்படுகிறது. நான் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால், அமேசான் பரிசுக் கூப்பனை வாங்கி, அதற்குரிய ரகசிய எண்ணை மட்டும் அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பாா்த்து சந்தேகமடைந்த சில காவல் துறை அதிகாரிகள், அபய்குமாா் சிங்கை தொடா்புகொண்டு பேசியுள்ளனா். அப்போது அவா், யாரிடமும் பரிசுக் கூப்பன் கேட்கவில்லை என்பதும், அவரது புகைப்படத்தையும், பெயரையும் பயன்படுத்தி மோசடி நடைபெறுவதும் தெரியவந்தது. ‘பாஸ் ஸ்கேம்’ என்று சைபா் குற்ற வல்லுநா்களால் அழைக்கப்படும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்களைக் கண்டறிந்து கைது செய்யும் வகையில், சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.