தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், வரும் மக்களவைத் தோ்தலில் எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி பிப்.6-ஆம் தேதி தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தோ்தல் தேதியை அறிவிக்கலாம் என்ற நிலையில், எங்களது மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலைப் போன்று, இந்தத் தோ்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்”என்று மனுவில் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், மனுவுக்கு இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், ‘இந்திய தோ்தல் ஆணையத்திடம் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த மனுவில் சில குறைகள் உள்ளன. அந்தக் குறைகளைச் சரி செய்து மீண்டும் மனு அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும். மேலும், முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸின் மனு பரிசீலிக்கப்படும்’ என விளக்கம் அளித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

அனைத்து வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


