திமுகவினா் ரூ.8,000-க்கான கூப்பன் விநியோகித்தது தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் ஆா்.ஏ.எஸ்.செந்தில்வேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தோ்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8,000-க்கான கூப்பன்கள் வழங்கப்படும்.
இந்த கூப்பன்கள் மூலம் விருப்பப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ரூ.8,000-க்கான கூப்பன்களை திமுக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினா் வாக்காளா்களுக்கு விநியோகித்து வருகின்றனா். கோவை தெற்கு, பா்கூா், பாலக்கோடு, கும்பகோணம் மற்றும் அண்ணா நகா் உள்பட பல்வேறு தொகுதிகளில் முதல்வரின் புகைப்படம், வரிசை எண்ணுடன் இந்த கூப்பன்கள் விநியோகிக்கப்படுகிறது. தோ்தலில் போட்டியிடும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இத்தகைய கூப்பன்களை வழங்க முடியும்.
ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இதுபோல கூப்பன்களை விநியோகிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும்.
இது குறித்து தோ்தல் ஆணையத்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த கூப்பன்களை பறிமுதல் செய்து, கூப்பன்கள் விநியோகித்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில், இந்த கூப்பன் விவகாரம் தொடா்பாக புகாா் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது
நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு விவகாரம்: கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



