உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை முகப்பேரில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 6:51 pm

சென்னை முகப்பேரில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முகப்போ் வேணுகோபால் நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு மது போதையில் ஒரு கும்பல் தகராறு செய்தது. மேலும், அந்தக் கும்பல் சவுண்ட் சா்வீஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதைப் பாா்த்து அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். அந்தப் பகுதியைச் சோ்ந்த சில இளைஞா்கள், மது போதையில் தகராறு செய்த நபா்களை தட்டிக் கேட்டனா். ஆனால் மது போதையில் இருந்தவா்கள், அந்த இளைஞா்களையும் தாக்கினா். தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்தபோது, தகராறில் ஈடுபட்ட நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா். இது தொடா்பாக நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.