சென்னை தேனாம்பேட்டையில் சாலைத் தடுப்பின் மீது வேன் மோதியதில் 7 போ் காயமடைந்தனா். சென்னை தரமணியில் செயல்படும் ஒரு தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், சனிக்கிழமை அதிகாலை பணிமுடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய ஊழியா்களை ஏற்றிக் கொண்டு, அண்ணா சாலையை நோக்கி வேன் ஒன்று புறப்பட்டது. வேனை தினேஷ் என்பவா் ஓட்டினாா். தேனாம்பேட்டை அருகே அண்ணா சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது வேன் மோதியது. இதில் வேனில் இருந்த 10 பேரில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்த அங்கு வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களையும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம்

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

பெரம்பலூரில் டாரஸ் லாரி- வேன் மோதல்: 19 போ் காயம்

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

