போதைப் பொருள் கடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தில்லியில் போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பலை சோ்ந்தவா்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில், இவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமாா் 3,500 கிலோ போதைப் பொருள்களை பலமுறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும், அதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. போதைப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய அனைவரையும் தமிழக அரசு உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


