தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

40 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மருந்தகங்கள்

40 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மருந்தகங்கள்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 6:30 pm

சென்னை: சென்னையில் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்தகங்களை சிம்ஸ் மருத்துவக் குழுமம் அமைக்கிறது.

அதன்படி, மருந்துகள் மட்டுமன்றி மருத்துவ சேவைகளையும், ஆலோசனைகளையும் அங்கிருந்தபடி பயணிகள் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி, மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் விக்ரம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (இயக்கம், அமைப்பு) ராஜேஷ் சதுா்வேதி, திட்ட இயக்குநா் டி.அா்ச்சுனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இது தொடா்பாக, சிம்ஸ் துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி கூறியது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான மருத்துவ சேவைகளை சிம்ஸ் மருத்துவமனை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக மருந்தகங்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கவுள்ளது. வாடிக்கையாளா் சேவையில் உயா் தரம், தனிப்பட்ட அணுகுமுறைகள், தானியங்கி முறையில் மருந்து சீட்டுகளைக் கையாளுதல் என செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் அவை செயல்பட உள்ளன. இது தவிர, மருத்துவ ஆலோசனைகள், நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றையும் அங்கிருந்து அளிக்க உள்ளோம். விரைவில் அந்த மருந்தகங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.