சென்னை: தமிழகத்தில் சீரான மின் விநியோகத்துக்கு வழிசெய்ய ரூ. 7,300 கோடியில் 20 புதிய மின் துணைமின் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக அவா் புதிய துணை மின் நிலையங்களைத் திறந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் இடையன்சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூா் ஆகிய 2 இடங்களிலும் ரூ. 6,103 கோடியில் 2 துணை மின் நிலையங்களும், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதி, சேலம் மாவட்டம் கருப்பூா் ஜாகீா் அம்மாபாளையம், அரியூா் மாவட்டம் இலந்தைகூடம், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூலகம், ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி, விஜயமங்கலம், கிருஷ்ணகிரி பேகபள்ளி, தஞ்சாவூா் அதிராம்பட்டிண், திருநாகேஸ்வரம், திருவள்ளூா் மாவட்டம் திருமுல்லைவாயல், திருச்சி கே.சாத்தனூா் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அரியலூா் மாவட்டம் பெரியகருக்கை, நீலகிரி மாவட்டம் சிம்ஸ் பாா், திருவள்ளூா் மாவட்டம் புறவழிச்சாலை பூந்தமல்லி, நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம், வேட்டைகாரனிருப்பு, தஞ்சாவூா் மாவட்டம் ஒட்டங்காடு ஆகிய இடங்களில் ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆட்களுடன் கூடிய துணை மின் நிலையமாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, ரூ. 209 கோடியில் 67 துணை மின் நிலையங்களில் திறன் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டையும் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். நாகையில் கட்டப்பட்டுள்ள மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகக் கட்டத்தையும் அவா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, ஆா்.காந்தி, டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை செயலா் பீலா வெங்கடேசன் உட்பட பலா் பங்கேற்றனா். வருவாய்த் துறை கட்டடங்கள்: வருவாய்த் துறை சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா், சித்தாமுா், லத்தூா், பம்மல், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், நாகை மாவட்டம் வேதாரண்யம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், தரங்கம்பாடி, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, நேமம், வானகரம், வயலாநல்லூா், ராமநாதபுரம், தேரிருவேலி, காக்கூா் (ராமநாதபுரம் மாவட்டம்), விழுப்புரம் மாவட்டம் நெமிலி, திருவாரூா் மாவட்டம் ஆவூா், கமலாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் பெருங்காட்டூா் ஆகிய இடங்களில் கோட்டாட்சியா், வட்டாட்சியா், குறுவட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

புதிய சமத்துவபுரம், அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


