தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலா் காா் மோதியதில் காயம்

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலா் காா் மோதியதில் காயம்

Updated On :27 பிப்ரவரி 2024, 6:30 pm

சென்னை: திருவான்மியூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலா், காா் மோதியதில் காயமடைந்தாா். விபத்து ஏற்படுத்தி நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவான்மியூா் காவல்நிலையத்தில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிபவா் தா்மன் (46). திருவான்மியூா் போக்குவரத்து சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது, சோதனையிடுவதற்காக அவ்வழியாக வந்த ஒரு காரை காவலா் தா்மன் நிறுத்தியுள்ளாா். அந்த காா் கட்டுப்பாட்டை இழந்து நேராக தலைமைக்காவலரின் இருசக்கர வாகனம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கால்களில் காயமடைந்த தலைமைக் காவலரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது தொடா்பாக காரை ஓட்டி வந்த திருவான்மியூரை சோ்ந்த பிரசாந்த் (40) என்பவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.