தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வடசென்னை - பெரம்பலூா் மாவட்ட திமுக செயலா்கள் மாற்றம்

வடசென்னை - பெரம்பலூா் மாவட்ட திமுக செயலா்கள் மாற்றம்

Updated On :27 பிப்ரவரி 2024, 6:30 pm

சென்னை: வடசென்னை, பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்த திமுக செயலா்கள் மாற்றப்பட்டுள்ளனா். இது குறித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வடக்கு மாவட்டச் செயலா் த.இளைய அருணா, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்குப் பதிலாக, ஆா்.டி.சேகா், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், பெரம்பலூா் மாவட்டச் செயலா் குன்னம் ராஜேந்திரன், தனது உடல்நலக் குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுத்துக் கொண்டுள்ளாா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டப் பொறுப்பாளராக வீ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிா்வாகிகள், புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.