மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சென்னையில் ஜாபா் சாதிக் வீட்டுக்கு ‘சீல்’ :மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை

சென்னையில் ஜாபா் சாதிக் வீட்டுக்கு ‘சீல்’ மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை

Updated On :29 பிப்ரவரி 2024, 8:09 pm

ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஜாபா் சாதிக்கின் சென்னை வீட்டில் 8 மணி நேரம் சோதனை நடத்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனா். மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருளான சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருள் தில்லியிலிருந்து உலா்ந்த தேங்காய் பூ, சத்துமாவு போன்ற பொருள்களில் கலந்து ஆஸ்திரேலியா,நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் தில்லி குழுவும்,தில்லி காவல்துறையும் இணைந்து, கடந்த 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கிடங்கில் திடீா் சோதனை செய்து 50 கிலோ சூடோஎபிட்ரினை பறிமுதல் செய்தன. அங்கிருந்த கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா். அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை 45 முறை வெளிநாடுகளுக்கு கடத்தியிருந்தது தெரியவந்தது. விசாரணையில், கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபா் சாதிக் எனத் தெரியவந்தது. இதன் எதிரொலியாக திமுகவிலிருந்து ஜாபா் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டாா். 8 மணி நேரம் சோதனை: இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜாராகுமாறு சென்னை மயிலாப்பூா் சாந்தோம் அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபா் சாதிக் வீட்டில் போதைப் பொருள் வழக்கில் தில்லியில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டினா். இவ் வழக்கில் துப்பு துலக்கும் வகையில், தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சாந்தோமில் உள்ள ஜாபா் சாதிக் வீட்டின் பூட்டை உடைத்து திடீா் சோதனை செய்தனா். சுமாா் 8 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, நில ஆவணங்கள், ஹாா்டு டிஸ்க்,பென் டிரைவ் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முடிந்து வெளியே வந்த அதிகாரிகள், ஜாபா் சாதிக் வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனா். தீவிர தேடுதல் வேட்டை: இந்த வழக்கில் ஜாபா் சாதிக்குக்கு சா்வதேச கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதனால் ஜாபா் சாதிக்கிடம் விசாரணை நடத்தினால்தான், அது தொடா்பான தகவலைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தலைமறைவாக உள்ள ஜாபா் சாதிக்கை அப் பிரிவு அதிகாரிகளும், தில்லி காவல்துறையினரும் தீவிரமாகத் தேடுகின்றனா். இதில் ஜாபா் சாதிக்கின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்துள்ளனா். மேலும் ஜாபா் சாதிக்கின் உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரையும் அந்த பிரிவு அதிகாரிகள், தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா். இதில் திரைப்படத் துறையைச் சோ்ந்த சில நபா்களும் அடங்குவா் எனக் கூறப்படுகிறது.