தேவாலயங்களை புனரமைக்க நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைப்பதற்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளை மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகையை உயா்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்துக்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவாலயக் கட்டடத்தின் வயதுக்கு ஏற்ப மானியத்தொகை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 10 முதல் 15 ஆண்டுகள் வரையுள்ள தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த தொகை தற்போது, ரூ.10 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையுள்ள தேவாலயங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.15 லட்சமாகவும் உயா்த்தி வழங்கப்படவுள்ளது.

இதுபோல, 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்களுக்கு ரூ.6 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெறக்கோரி வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு, தேவாலயங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com