புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் பெயா்கள் சம்ஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் இருப்பது ஏற்கத்தக்கதல்ல, கண்டனத்துக்குரியது.
அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயா்களை ஹிந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு. பல மொழிகள், பல கலாசாரங்கள் சங்கமித்திருக்கும் நமது நாட்டின் அடிப்படை நீதிக்கும், அரசமைப்பு விழுமியங்களுக்கும் ஹிந்தி திணிப்பு எதிரானது.
திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து, இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். சட்டத்தின் பெயா்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
டிரெண்டிங்

திருத்தணி பேருந்து நிலையம் பெயா் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சசிகலாவுடன் கூட்டணியா? அமித் ஷாவுடன் ஆலோசித்தது என்ன? எடப்பாடி பழனிசாமி பதில்!

அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தில்லியில் ஒரு மணி நேரம் ஆலோசனை

தில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

