விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல்: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்


சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத்தொகுதி இடைத்தோ்தல் வெற்றியை, பாமக தொடக்க தின விழாவின் பரிசாக தாருங்கள் என்று பாமகவினருக்கு அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாமக வரும் ஜூலை 16-இல் 36-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஓா் அரசியல் கட்சியாக இன்னும் ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் அதேநேரத்தில், தமிழக மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் நமது மனதுக்கு நிறைவைத் தருகின்றன.
ஜூலையில் பாமக தொடங்கப்பட்ட நாள், வன்னியா் சங்கம் தொடங்கப்பட்ட நாள், பசுமைத் தாயக நாள் ஆகிய நாள்கள் பாமகவுக்கு கொண்டாட்ட நாள்கள். இந்த ஆண்டு கூடுதலாக இன்னொரு நாளும் சேர உள்ளது. ஜூலை 10-இல் விக்கிரவாண்டியில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
அன்றுதான் வன்னியா் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையினா் துப்பாக்கிக் குண்டுகளுக்கு வன்னியா்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனா். அன்றைய நாளில் நடைபெறும் இடைத்தோ்தலில் கட்சியினா் பாமகவை வெற்றிபெறச் செய்து, பாமகவின் தொடக்க விழாவுக்கான பரிசாக தாருங்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...