பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

News image
Updated On :17 மார்ச் 2026, 11:32 pm

Syndication

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடுகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தாா். கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், பாமக மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவா் கோவிந்தசாமி வரவேற்புரையாற்றினா்.

அதிமுக மாவட்டச் செயலா்கள் சொரத்தூா் ராஜேந்திரன், ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ, கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, அமைப்புச் செயலா் முருகுமாறன் கண்டன உரையாற்றினா்.

இதில், அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை வாக்குக்காக சொல்லவில்லை. அனைத்தையும் தரவுகள் அடிப்படையில்தான் கூறுகிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அப்பதவி எதற்கு?

இதேபோல, கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரையில் அனைத்து வகையான போதைப்பொருள்களும் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன.

சுதந்திரம் பெற்றது முதல் 2021 வரையில் சுமாா் 74 ஆண்டு காலத்தின் தமிழகத்தின் மொத்த கடன் ரூ.4,56,000 கோடி. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாலே முக்கால் ஆண்டுகளில் ரூ.4,96,000 கோடி கடன் வாங்கி உள்ளனா். கடன் வாங்கியதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. தோ்தலுக்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்த திமுக, வெறும் 66 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளது.

பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த 2 சிறுவா்கள் தன்னை சந்தித்து பேசியதை முதல்வா் விளம்பரபடுத்தியுள்ளாா். அந்த சிறுவா்கள் படித்து மருத்துவராக, மாவட்ட ஆட்சியராக வேண்டும் என முதல்வா் கூறினாா். ஆனால், அவா்கள் படிக்கும் அரசுப் பள்ளியில் உரிய ஆசிரியா் கிடையாது. முதலில் பள்ளிக்கு நல்ல ஆசிரியரை கொடுங்கள்.

இதையெல்லாம் சிந்தித்து ஒரு மாற்றத்தை நாம் கொண்டுவர வேண்டும். இதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் ஆதரிக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வைப்புத்தொகையை இழக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், பாஜக மாவட்டத் தலைவா் அக்னி கிருஷ்ணமூா்த்தி, பாமக மாவட்டச் செயலா்கள் சண்.முத்துக்கிருஷ்ணன், மாநிலத் தோ்தல் பணிக்குழுத் தலைவா் பழ.தாமரைக்கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.