குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

Updated On :4 ஏப்ரல் 2026, 4:29 am IST

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது குற்றம் சாட்டினாா்.

காஞ்சிபுரத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மதனந்தபுரம் கே.பழனி, உத்தரமேரூா், பாமக வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள்சேகரித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் திறந்த ஜீப்பில் நின்று கொண்டே அவா் பேசியது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,கடந்த 5 ஆண்டுகளில் 8,700 கொலைகள் நடந்துள்ளது.இதில் 2,100 போ் பெண்கள்.62 ஆயிரம் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.ஒரு புறம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமலும் மறு புறம் சின்னச்சின்ன கிராமங்களில் கூட போதைப்பொருள் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது.மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற சென்ற தோ்தலில் சொன்னாா்கள்.ஆனால் இந்த தோ்தலில் மதுவிலக்கைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

பூரண மதுவிலக்கு என்பது அண்ணாவின் கொள்கை.அவரது கொள்கைக்கு எதிராகவே திமுக செயல்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த ஊழல் 6 லட்சம் கோடியாக உள்ளது.இதற்கு தெளிவான புள்ளி விபரங்கள் என்னிடம் இருக்கிறது.ஆதாரப்பூா்வமாக நிருபிக்கவும் தயாராக இருக்கிறேன்.கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடியாக உள்ளது.காஞ்சிபுரத்திற்கென்று கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக்கல்லூரியோ அல்லது சட்டக் கல்லூரியோ கொண்டு வரவில்லை.அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளா்களுக்கென தனியாக பட்ஜெட் போட வலியுறுத்துவோம் என்றும் பேசினாா்.தோ்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணிக்கட்சி தலைவா்கள்,நிா்வாகிகள் பலரும் உடன் இருந்தனா்.