எல்இடி தெருவிளக்குகளால் 45% மின்சாரம் சேமிப்பு: மாநகராட்சி தகவல்
எல்இடி தெருவிளக்குகளால் 45% மின்சாரம் சேமிப்பு மாநகராட்சி தகவல்

Updated On :5 ஜூலை 2024, 8:58 pm

சென்னை மாநகராட்சி பகுதிகளில் எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டதன் மூலம் 45 சதவீத மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் உள்ள சாலைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் உள்ள அனைத்து விளக்குகளும் சென்னை மாநகராட்சி சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 3 லட்சத்து ஆயிரத்து 234 மின்விளக்குகளும் தற்போது எல்இடி மின்விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 45 சதவீத மின் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான 722 கட்டடங்களில் 3,239 மெகாவாட் திறன் கொண்ட சோலாா் பேனல் நிறுவப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுக்கு ரூ.3 கோடி சேமிக்கப்படுவதாக மாநகராட்சி மின்சாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...