தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒரே பயணச்சீட்டில் 3 வகையான பயணம்: அடுத்த ஆண்டில் முழு பயன்பாடு

ஒரே பயணச் சீட்டில் 3 வகையான போக்குவரத்துகளில் பயணிக்கும் திட்டம் அடுத்த ஆண்டு முழு பயன்பாட்டுக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜூலை 2024, 7:49 pm

Din

சென்னை: ஒரே பயணச் சீட்டில் 3 வகையான போக்குவரத்துகளில் பயணிக்கும் திட்டம் அடுத்த ஆண்டு முழு பயன்பாட்டுக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட 3 பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன. இவற்றில் பயணிக்க பொதுமக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு எடுத்து வருகின்றனா். இதனால், ஒரே நேரத்தில் ரயில், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இதைப் போக்கும் வகையில், 3 வகை போக்குவரத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான செயலியை உருவாக்குவதற்கான டெண்டா் ‘மூவிங் டெக் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு பணி ஆணையை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் செவ்வாய்கிழமை வழங்கியுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக நடப்பாண்டு டிசம்பா் மாதத்தில், சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யவும், அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தில் புகா் ரயில்களிலும் இணைத்து பயணம் மேற்கொள்ளும் வகையிலும் இந்தத் திட்டம் முழு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.