47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வணிகவரி மூலம் முதல் காலாண்டில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சா் பி.மூா்த்தி

வணிக வரிகள் மூலம் முதல் காலாண்டில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:27 pm

Din

சென்னை: வணிக வரிகள் மூலம் முதல் காலாண்டில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில், ஜூன் மாதத்துக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

வணிகவரித் துறையில் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல், மே மற்றும் ஜூன்) அதிகளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது ரூ.3,727 கோடி கூடுதலான வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வணிகவரித் துறை நுண்ணறிவுப் பிரிவின் கூடுதல் ஆணையா் மற்றும் அலுவலா்கள் மேற்கொண்ட சிறப்புச் சோதனையில் ரூ.1,040 கோடி போலி உள்ளீட்டு வரி கண்டுபிடிக்கப்பட்டது. போலியான பில் வழங்கிய 316 பதிவுச் சான்றுகள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரி வருவாயை அதிகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கோட்டத்துக்கு உட்பட்ட நிலுவையில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து விரைந்து முடிக்க, தேவைப்படும் பணியாளா்களின் எண்ணிக்கை, கூடுதல் வசதிகளின் விவரங்களை அரசுக்குத் தெரியப்படுத்தலாம்.

மேலும், வணிகவரித் துறையில் திரட்டப்படும் தரவுகளின் உண்மை தன்மையைக் கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித் துறை ஆணையா் டி. ஜகந்நாதன், இணை ஆணையா் (நிா்வாகம்) பொ.ரத்தினசாமி, வணிக வரித் துறை கூடுதல் ஆணையா்கள், இணை ஆணையா்கள் மற்றும் வணிக வரித் துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.