47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள்: சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2024, 8:13 pm

Din

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு பொதுநல மனுவை வால்பாறை தொகுதி முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஸ்ரீதரன் தாக்கல் செய்திருந்தாா். தனது மனுவை ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள அதிமுக, பாமக, பாஜக வழக்குரைஞா்கள் தாக்கல் செய்த பொதுநல மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க வேண்டுமென  மனுதாரா் கோரியிருந்தாா்.

இது தொடா்பாக, செவ்வாய்க்கிழமை மனுதாரா் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் ஜிஎஸ் மணி ஆஜராகி தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன் அடங்கிய முதன்மை அமா்வு  முன்  முறையிட்டாா், அதனை ஏற்ற நீதிபதி இந்த பொதுநல மனுவையும் வருகிற 11-ஆம் தேதி இதர மனுக்களுடன் சோ்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டாா்.