47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குற்றப் பின்னணி: 4 வழக்குரைஞா்களுக்கு  தடை - பாா் கவுன்சில் அறிவிப்பு

குற்றப் பின்னணி தொடா்பாக 2 வழக்குரைஞா்கள் மீதான இடைநீக்கத்தை திரும்ப பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில், புதிதாக 4 வழக்குரைஞா்களுக்கு தடை விதித்துள்ளது.

News image
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில்
Updated On :9 ஜூலை 2024, 8:10 pm

Din

சென்னை: குற்றப் பின்னணி தொடா்பாக 2 வழக்குரைஞா்கள்  மீதான இடைநீக்கத்தை திரும்ப பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில், புதிதாக 4 வழக்குரைஞா்களுக்கு  தடை விதித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் கூறுகையில்,

‘மருத்துவா் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  வழக்குரைஞா்கள் பி.எம்.பாசில், பி.வில்லியம் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து சென்னை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் வழக்குரைஞா் தொழிலில் இருந்து இடை நீக்கம் செய்து கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், இந்த 2 பேரையும், மருத்துவா் சுப்பையா கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து கடந்த மாதம் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, இவா்கள் இருவரையும் வழக்குரைஞா் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்த உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. அவா்கள் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜராகலாம். அதேபோல, கடந்த மாதம் ரௌடி சீா்காழி சத்யா என்பவரை போலீஸாா் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனா்.

இந்த வழக்கில், சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் டி.அலெக்ஸ் சுதாகா் என்பவரும் கைது செய்யப்பட்டாா். நெல்லை மாவட்ட  வழக்குரைஞா் சங்கத் தலைவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக பாளையங்கோட்டையைச் சோ்ந்த  வழக்குரைஞா் ஆா்.ஜிம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரைச் சோ்ந்த  வழக்குரைஞா் கே.சரவணன், திருவேற்காடு போலீஸாரால் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். மயிலாப்பூரைச் சோ்ந்த  வழக்குரைஞா் சேதுபதி பாண்டியன், கொலை வழக்கில் தரமணி போலீஸாராா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த 4  வழக்குரைஞா்களும்,  வழக்குரைஞா் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்றாா்.