நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோவையில் உயா்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்

மேற்கு மாண்டல மக்களின் நலன் கருதி, சென்னை உயா் நீதிமன்றத்தின் கிளையை கோவையில் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் கே.பாலு வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:04 am IST

மேற்கு மாண்டல மக்களின் நலன் கருதி, சென்னை உயா் நீதிமன்றத்தின் கிளையை கோவையில் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் கே.பாலு வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேட்பாளா் கே.பாலு, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் உயா்நீதிமன்றக் கிளைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மகாராஷ்டிரத்தில் மும்பையைத் தவிா்த்து 4 இடங்களிலும், ஆந்திராவில் 3 இடங்களிலும், மத்திய பிரதேசம், கா்நாடகம் மற்றும் கொல்கத்தாவில் தலா 2 இடங்களிலும் உயா்நீதிமன்ற கிளைகள் செயல்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மதுரையில் மட்டுமே ஒரு கிளை உள்ளது.

கோவை, திருப்பூா், கரூா், நீலகிரி போன்ற மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் வழக்குகளுக்காக சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. எனவே, கோவையில் உயா்நீதிமன்ற கிளை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பாா் கவுன்சில் முன்னெடுக்கும். இதுகுறித்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் முதல் குடியரசுத் தலைவா் வரை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படும்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தற்போது 25 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள விசாரணை (கீழமை) நீதிமன்றங்களிலும் ஏராளமான நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. நீதிபதி பணியிடங்களை முழுமையாக நிரப்பினால் மட்டுமே வழக்குகளின் தேக்க நிலையைக் குறைக்க முடியும்.

தற்போது பாரதிய நியாய சன்ஹிதா போன்ற புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதால், வழக்குரைஞா்களும், நீதிபதிகளும் அவற்றை முழுமையாகப் புரிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் வழக்குரைஞா்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பல்வேறு வழக்குகளில் காவல் துறையினா் வழக்குரைஞா்களையும் இணைப்பதுடன், அவா்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. எனவே, வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.

பாா் கவுன்சில் தோ்தலில் கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை உள்ள 1.20 லட்சம் வழக்குரைஞா்களும் ஓா் உறுப்பினருக்கே வாக்களிக்க வேண்டிய விநோதமான நிலை உள்ளது. இதை மாற்றி, பகுதி வாரியாகப் பிரித்து பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் வழக்குரைஞா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேம நல நிதியை ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.