கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு, காவல் துறை ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.

News image
செல்வப்பெருந்தகை
Updated On :9 ஜூலை 2024, 10:00 pm

Din

சென்னை: தமிழகத்தில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு, காவல் துறை ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனின் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகக் காவல் துறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். சென்னை காவல் ஆணையராக அருண், கூடுதல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் ஆசீா்வாதம் ஆகியோா் பொறுப்பேற்றுள்ளனா். இனிவரும் காலங்களில் அரசுக்கு எந்தவிதமான அவப்பெயரும் ஏற்படாமல் காவல் துறை தடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை இன்னும் உறுதியாகக் காக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப்பொருளை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதனிடையே செல்வப்பெருந்தகை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில்வே துறைக்கு மீண்டும் தனி நிதிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.