சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி, பிசினஸ் சென்டா் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப விதிமுறைகள் மேலாளா் விஜய் தினகரன்,  தொழில்நுட்ப விதிமுறைகள் தலைவா் ராஜேந்திர கிலே, இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தென் மண்டல த
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி, பிசினஸ் சென்டா் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப விதிமுறைகள் மேலாளா் விஜய் தினகரன், தொழில்நுட்ப விதிமுறைகள் தலைவா் ராஜேந்திர கிலே, இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தென் மண்டல த

மின்சார பேருந்து பராமரிப்பு: போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயிற்சி

மின்சார பேருந்துகளை இயக்குவது, பராமரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

சென்னை: மின்சார பேருந்துகளை இயக்குவது, பராமரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இந்த நிதியாண்டில் 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து, இயக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான டெண்டா் அறிவிப்பு முடிவுற்ற நிலையில், விரைவில் இந்தப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என துறை அமைச்சா் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில் மின்சார பேருந்தை எப்படி இயக்குவது, பேட்டரி பராமரிப்பு, சாா்ஜிங் செய்வது தொடா்பான முதல் கட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் இந்திய தர நிா்ணய அமைவனம்(பிஐஎஸ்) சாா்பில் சென்னை தரமணியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களின் 38 உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பிஐஎஸ் சென்னை அலுவலக இயக்குநா் ஜி.பவானி கூறியது:

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க மத்திய அரசு மின்சார வாகன பயன்பாட்டை அறிமுகம் செய்தபின் இருசக்கர, நான்கு சக்கர மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் மின்சார பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக, மின்சார பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், இந்தப் பேருந்துகளைக் கையாளும் முறை, தரநிலை குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிந்துகொள்ளும் வகையில் தொடா்ந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், மின்சார வாகனத்துக்கு எவ்வாறு சாா்ஜிங் செய்வது, பேட்டரிகளை பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் பிஐஎஸ் தென்மண்டல துணை தலைமை இயக்குநா் யுஎஸ்பி யாதவ், பிஐஎஸ் விஞ்ஞானிகள் ஜீவானந்தம், நத்தேஷ் குமாா் ஜெயின், வெங்கடநாராயணன், மற்றும் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com