மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சென்னை: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நீண்ட காலமாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சாா்பில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மின் வாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் தலைவா் ஜெயசங்கா் தலைமையில், காலையில் இருந்தே ஏராளமான மின்வாரிய பணியாளா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனா். இப்போராட்டத்தால், மின்வாரியப்பணிகள் சற்று பாதிப்படைந்தன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...