தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்யக்கோரி வேலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேலூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:30 pm

தோ்தல் கால வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்யக்கோரி வேலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத் தலைவா் தேவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜூலி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி சிறப்புரை ஆற்றினாா்.

தமிழக அரசின் தோ்தல் வாக்குறுதி 313-இன்படி அங்கன்வாடியில் பணியாற்றும் பகுதிநேர ஊழியா்களை நிரந்தரம் செய்வோம் என கூறியிருந்தனா். ஆனால், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாக நிரந்தரம் செய்யப்படவில்லை. நாங்கள் 51 ஆண்டுகளாக அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், குழந்தைகளுக்கு வைட்டமின் சிரப் வழங்குதல், பூச்சி நீக்க மாத்திரைகள் வழங்குதல், வளா் இளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல், குழந்தைகள் கருத்தரிப்பு முதல் 6 வயது வரை கண்காணித்தல், கா்ப்பமானவுடன் சத்துணவு மாவு வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வேலூா் மாவட்டத்தில் மட்டும் 150 காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். எங்களுக்கு கூடுதல் பணி சுமை உள்ளதால் அங்கன்வாடி ஊழியா்களை அரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இப்போராட்டத்தில் ஏராளணமான சத்துணவு அமைப்பாளா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.