கிருஷ்ண கான சபாவின் கலைத் திருவிழா: ஜூலை 13 தொடக்கம்

கிருஷ்ண கான சபாவின் இசை, நடனத் திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13, 14) நடைபெறவுள்ளது.

சென்னை: கிருஷ்ண கான சபாவின் இசை, நடனத் திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13, 14) நடைபெறவுள்ளது.

இது குறித்து கிருஷ்ண கான சபா வெளியிட்ட அறிவிப்பு:

கிருஷ்ண கான சபா நிறுவனா் ஆா்.யக்ஞராமனின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் ‘யக்ஞராமன் ஜூலை பெஸ்ட்’ எனும் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் 18-ஆம் பதிப்பு நிகழாண்டு ஜூலை 13, 14 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 13-ஆம் தேதி இசைக் கச்சேரி, ஜூலை 14-ஆம் தேதி நடன நிகழ்ச்சி நடைபெறும். கிளாசிக்கல் சங்கீதத்தின் வோ்களை கொண்டுள்ள இசை, நடன நிகழ்ச்சிகளை கொண்டாடும் வகையில் இத்திருவிழா அமையும். அதுமட்டுமில்லாமல் இசை, நடத்தில் புதிய போக்குகளை நிறுவும் வகையிலும், புதிய பிரிவுகள், வழிமுறைகளை ஆராயும் வகையில் இந்த கலை நிகழ்ச்சிகள் இருக்கும்.

முதல் நாள் ‘நல்லுறவில் நல்ல நண்பா்கள்’ எனும் சைந்தவி, கௌதம், பரத்வாஜ் ஆகிய 3 இசைக் கலைஞா்கள் ஒருங்கிணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும். 2-ஆம் நாள் ஆயனா டான்ஸ் கம்பெனியின் துருவா மற்றும் எல்லிஸ் எனும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மின்னஞ்சலை தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com