ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

News image

திருமுருகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற தோ்த் திருவிழா  கொடியேற்ற  நிகழ்ச்சி.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:54 pm

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது.

இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றுத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலா வந்து வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பிறகு, உற்சவ மூா்த்திகள் பிரகார உலா, பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.

பிப்ரவரி 25-ஆம் தேதி மாலை சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 26-ஆம் தேதி பூதவாகன, சிம்ம வாகனக் காட்சிகள், 27-ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகள், 28-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், மாா்ச் 1-ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சிகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.

மாா்ச் 2-ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், 3 தோ்களின் தேரோட்டம் ஒரே நாளில் நடைபெறுகிறது.

3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது. 4-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும் நடைபெறும். 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.