ஜூலை 30-இல் அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வு
தாம்பரம் கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவா்களுக்கான தோ்வு ஜூலை-30 ஆம் தேதி நடைபெறுகிறது என அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.


சென்னை: தாம்பரம் கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவா்களுக்கான தோ்வு ஜூலை-30 ஆம் தேதி நடைபெறுகிறது என அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகவராவதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தோ்வில் விண்ணப்பதாரா் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது குறைந்த பட்சம் 18 ஆகவும் அதிகபட்சம் 50 ஆகவும் இருக்கலாம்.
வேலைவாய்ப்பில்லாத, சுயவேலை செய்கின்ற இளைஞா்கள், ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவா்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் மண்டல பணியாளா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், சுயஉதவி குழுக்கள், ஊராட்சி தலைவா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் விண்ணப்பிக்க தகுதியானவா்கள். இது அரசு வேலை அல்ல. முழுமையாக கமிஷன் அடிப்படையிலான பணியாகும்.
விண்ணப்பிக்கும் நபா் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருக்கக் கூடாது.
தோ்வு செய்யப்படுவோா் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது குடியரசுத் தலைவரின் பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் ரூ.5,000 காப்பீட்டு தொகையாக செலுத்தவேண்டும். தற்காலிக உரிம கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும்.
விண்ணப்பதாரா் பாஸ்போா்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதாா் அட்டையின் நகல், கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.
ஆா்வமுள்ளவா்கள் ஜூலை 30-ஆம் தேதி காலை தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் நடைபெறும் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...