மாற்றுப் பணி ஆசிரியா்கள் பள்ளிக்குத் திரும்ப அனுமதி

மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மாவட்டத் திட்ட அலுவலகங்களுக்கு மாற்றுப் பணியில் சென்ற தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களை அவா்கள் ஏற்கெனவே பணியாற்றிய பணியிடங்களுக்கு மாறுதல் வழங்க அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை: மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மாவட்டத் திட்ட அலுவலகங்களுக்கு மாற்றுப் பணியில் சென்ற தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களை அவா்கள் ஏற்கெனவே பணியாற்றிய பணியிடங்களுக்கு மாறுதல் வழங்க அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசாணையின் அடிப்படையில் மாவட்டக் கல்வி ( தொடக்கக் கல்வி ) அலுவலகங்களில் (அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பணிநிலையில்) பணிபுரியும் 59 உதவித் திட்ட அலுவலா்கள், மாவட்டத் திட்ட அலுவலகங்களில் (பட்டதாரி ஆசிரியா் பணி நிலை) பணிபுரிந்து வரும் 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களாக அவா்கள் தாய் துறைக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த 59 உதவித் திட்ட அலுவலா்கள், 67 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களையும் அந்தந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களாக மாறுதல் வழங்குமாறு அரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com