இன்று டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: எரிபொருள் தடையின்றி கிடைக்கும்
டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கு எவ்வித தடையின்றி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சென்னை: டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கு எவ்வித தடையின்றி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஜூலை 10), ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டேங்கா் லாரி ஒப்பந்ததாரா்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதால், இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் எரிபொருள் கையிருப்பும், வாகன வசதியும் இருப்பதால் வாடிக்கையாளா்களுக்கான எரிபொருள் தடையின்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...