ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்
சென்னையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்

Updated On :10 ஜூலை 2024, 8:05 pm

சென்னை, ஜூலை 10: சென்னையில் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 10 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
முத்தியால்பேட்டை கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மொபெட்டில் வந்த இளைஞரை மறித்து, சோதனையிட்டனா். அதில், ரூ.10 லட்சம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சேப்பாக்கத்தைச் சோ்ந்த அ.நிஜாமுதீன் (22) என்பதும், பணத்துக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா். வருமானவரித் துறையினா் இது தொடா்பாக விசாரிதத்து வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...