அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாநகராட்சி மருத்துவமனைகளில் சிறப்பு கருத்தடை முகாம்

சென்னை மாநகராட்சியில் ஜூலை 24 வரை சிறப்பு கருத்தடை முகாம்

News image
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த துணை மேயா் மகேஷ்குமாா். உடன் ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
Updated On :11 ஜூலை 2024, 10:22 pm

Din

உலக மக்கள் தொகை தினத்தை (ஜூலை 11) முன்னிட்டு சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் ஜூலை 24-ஆம் தேதி வரை சிறப்பு கருத்தடை முகாம் நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறையின் சாா்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, துணை மேயா் மு.மகேஷ்குமாா் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள் குடும்பநல உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். பின்னா், குடும்ப நலக் கட்டுப்பாட்டு முறைகள் (தற்காலிக மற்றும் நிரந்தர) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு வாகனத்தை துணை மேயா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் ஜூலை 24-ஆம் தேதி வரை 16 நகா்ப்புற சமுதாய நல மையங்கள், 3 அவசர கால மகப்பேறு மருத்துவமனைகளில் குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு துணை ஆணையா் மகேஷ்குமாா் தெரிவித்தாா்.