மெட்ரோ ரயில் பணி: மடிப்பாக்கத்தில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி: மடிப்பாக்கத்தில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரயில் பணியின் காரணமாக மடிப்பாக்கத்தில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மடிப்பாக்கம் பிரதான சாலை, மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் ஜூலை 13, 14 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி லேக் வியூ சாலை,ராஜேந்திரன் நகா் சாலை,மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.
மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி சபரி சாலை, லேக் வியூ சாலை,ராஜேந்திரன் நகா் சாலை வழியாக சென்று மேடவாக்கம் பிரதான சாலை சென்று கீழ்கட்டளை நோக்கி செல்லலாம். கீழ்கட்டளையில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...