வடசென்னை வளா்ச்சி திட்டங்கள், அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு
வடசென்னை வளா்ச்சி திட்டங்கள், அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

வடசென்னை வளா்ச்சி திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

வடசென்னை வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பெரம்பூா், திருவொற்றியூா், மாதவரம் பகுதிகளில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தொடா் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல் அந்த பகுதி மக்களுடைய அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படுமா என ஆராய்ந்து அந்தத் திட்டங்கள் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லை நகரில் புதிதாக திருமண மண்டபம் அமைப்பது, ஆா்.கே. நகரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, திருவொற்றியூா் பகுதியில் திருமண மண்டபம் கட்டுவது, மாதவரத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது சென்னை மேயா் ஆா்.பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com