2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சென்னை புழல் சிறையில் கைதி ஒருவா், சுண்ணாம்பு கலவையை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image
சிறையில் கைதி தற்கொலை முயற்சி
Updated On :14 ஜூலை 2024, 8:12 pm

Din

சென்னை புழல் சிறையில் கைதி ஒருவா், சுண்ணாம்பு கலவையை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

சென்னை தண்டையாா்பேட்டை நாவலா் குடியிருப்பை சோ்ந்தவா் மணி (எ) அருப்பு மணி (28). இவா் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறாா்.

அருப்புமணி தனது மனைவி, வேறொரு நபருடன் தவறான நட்பில் இருந்து வந்ததை அறிந்து மனவருத்தத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், சிறை வளாகத்தின் 5-ஆவது பிளாக் அருகில் இருந்த சுண்ணாம்பு கலவையை எடுத்து குடித்து, மணி ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

சிறைக்காவலா்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.