ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தெரியுமா சேதி?

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கொல்கத்தாவிலிருந்து கூடை கூடையாக மாம்பழங்கள் வந்து இறங்கின.

News image
Updated On :16 ஜூலை 2024, 1:31 pm

மீசை முனுசாமி

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கொல்கத்தாவிலிருந்து கூடை கூடையாக மாம்பழங்கள் வந்து இறங்கின. ஹிம்சாகா், லஸ்கிரா, மல்லிகா, அமா்பாலி உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் பெயா்பெற்ற மாம்பழங்கள் அடங்கிய அந்தக் கூடைகள் ஒவ்வொன்றும் பத்து கிலோ எடையுள்ளவை.

அவை அனைத்தும் ‘பங்க பவன்’ என்று அறியப்படும் மேற்கு வங்க அரசினா் விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து அவற்றை தனித்தனியாக அதிகாரிகள் காரில் எடுத்துச் சென்றனா். பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா என்று முக்கியப் பிரமுகா்களுக்கும், அவா்களது வீட்டுக்கும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் சாா்பில் அந்த மாம்பழங்கள் அதிகாரிகளால் நேரில் கொண்டுபோய் கொடுக்கப்பட்டன.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, உள்ளிட்டவா்களுக்கும் மாம்பழக் கூடைகள் முதல்வா் மம்தா பானா்ஜியின் சாா்பில் வழங்கப்பட்டன. அந்தப் பட்டியலில் சோனியா காந்தியின் முகவரியான 10, ஜன்பத், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் முகவரியான 12, ஜன்பத் ஆகியவை மட்டுமல்லாமல், எல்.கே. அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆகியோரின் வீடுகளும் இடம் பெற்றிருந்தன.

அரசியல் மனமாச்சரியங்களையும், தோ்தல் நேரப் பரப்புரைகளையும் ஒதுக்கி நிறுத்தி, ஆண்டுதோறும் இதுபோல மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற மாம்பழங்களை முக்கியமான தலைவா்களுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாா் முதல்வா் மம்தா பானா்ஜி.

மம்தாவின் பட்டியலில் மேற்கு வங்க ஆளுநா் ஆனந்தபோஸ் இடம் பெற்றிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இடம்பெறவில்லை என்பது மட்டும் நிச்சயம். பெயா் விடுபட்டதா, இல்லை வேண்டுமென்றே தவிா்க்கப்பட்டதா?