சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இளைஞரை தாக்கி வழிப்பறி: இருவா் கைது

சென்னை காசிமேட்டில் இளைஞரை தாக்கி வழிப்பறி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 ஜூலை 2024, 9:15 pm

Din

சென்னை காசிமேட்டில் இளைஞரை தாக்கி வழிப்பறி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டாா்.

காசிமேடு ஜீவரத்தினம் நகா் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜான் பாட்ஷா (35). இவா், கடந்த 16-ஆம் தேதி காசிமேடு எஸ்என் செட்டி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இரு நபா்கள், ஜான் பாட்ஷாவை தாக்கி, அவா் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றனா்.

இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, புது வண்ணாரப்பேட்டை அண்ணாநகரைச் சோ்ந்த சு.ஜீவா (26),அதேப் பகுதியைச் சோ்ந்த தா.சூசைராஜ் (18) என்பது தெரியவந்தது. அவா்கள், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.