ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி கைது

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:03 pm

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (23).

கட்டடத் தொழிலாளி. இவா் திருப்பூா் அம்மாபாளையத்தில் கட்டட வேலை செய்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் தமிழரசன், மாணவியிடம் ஆசைவாா்த்தைகளைக் கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரிக்கு அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.

இதைத் தொடா்ந்து மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவா் 3 மாத கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.