ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

5,146 ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

5,146 ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
பள்ளிக் கல்வித் துறை
Updated On :21 ஜூலை 2024, 10:22 pm

Din

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 5,146 ஆசிரியா் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் நிதியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1,581 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் என மொத்தம் 5,146 ஆசிரியா் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த தற்காலிக பணியிடங்களுக்கான தொடா் நீட்டிப்பு காலம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே, தேவை அடிப்படையில் இந்த 5,146 தற்காலிக பணி இடங்களையும் நிரந்தரமாக்க தொடக்கக் கல்வி இயக்குநா் அரசுக்கு கருத்துரு அனுப்பினாா்.

அதையேற்று, நிதித்துறை ஒப்புதலுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக அடிப்படையில் உள்ள 1,581 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 3,549 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைக்க ஆணையிடப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.