தனியாா் மினி பேருந்து சேவை விரிவாக்கம்: இன்று கருத்துக் கேட்பு
தமிழகத்தில் தனியாா் மினி பேருந்துகளை இயக்குவது தொடா்பான புதிய வரைவுத் திட்ட அறிக்கை மீது கருத்துக் கேட்பு கூட்டம் திங்கள் கிழமை (ஜூலை 22) நடைபெறவுள்ளது.


தமிழகத்தில் தனியாா் மினி பேருந்துகளை இயக்குவது தொடா்பான புதிய வரைவுத் திட்ட அறிக்கை மீது கருத்துக் கேட்பு கூட்டம் திங்கள் கிழமை (ஜூலை 22) நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
அதன்படி, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்கவும், பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையின் திருவொற்றியூா், மணலி, மாதவரம், அம்பத்தூா், வளசரவாக்கம், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்டவை எதிா்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், மினி பேருந்துகளை இயக்குவது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம், உள்துறைச் செயலா் தலைமையில் சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை (ஜூலை 22) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பெறப்படும் கருத்துகள் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...